கவிஞர்கள் சங்கமம் 15.7.19 படிக்காத மேதை _________ தர்மம் உயிர் பெற்று பிறந்தது கர்ம...
கவிஞர்கள் சங்கமம்
15.7.19
படிக்காத மேதை
_________
தர்மம் உயிர் பெற்று
பிறந்தது
கர்மவீரர் எனப் புகழுடன் திகழ்ந்தது
பெரும் செயல் பல
புரிந்தது
வரும்படி சேர்க்காமல்
மறைந்தது
பாரதம் ஆளும் வாய்ப்பு
வந்தது
தீர சிந்தித்து முடிவு
தந்தது
நேர்மை வாய்மை கை
கொண்டது
சீர் இளம் தலைவர் பதவி பெற வழி
சொன்னது
நெடிய உயரம் கூரிய
விழிகள்
கரிய நிறம் வெள்ளை
நீள உடை
அரிய நேரிய தோற்றம்
புதிய அரசியல்
அரிச்சுவடி
பயிற்று பல கல்வி
பெற சாலைகள்
வந்தன
வயிற்றுக்கு சோறும்
மதியம் தந்ததன
வறுமை நிலை மாற திட்டங்கள் பிறந்தன
திறமை மிகு தமிழக இளைஞர்கள் நிலை
உயர்ந்தன
விவசாயம் செழிக்க
செய்தார்
தொழில் வளம் கொழிக்க செய்தார்
எழில் மிகு நீர்
அணைகள்
கண்டார்
அனல் புனல் மின் உற்பத்தி வழி தன் நிறைவு தந்தார்
அன்னையும் விதி
மீறி
தன் நலம் கருதி அரசு சலுகை பெறல் தவறு
எனச்
சொன்ன தலைவர்
ஐய்யா என் பாட்டன்
. வீட்டுக்கு
மெய்யாய் வந்தாய்
பொய் இன்றி உன்னுடன் உண்ணும்
வாய்ப்பு எனக்கும்
தந்தாய்
இன்று நாங்கள்
உயர்ந்து
குன்று போல்
இருப்பது
அன்று நீ இட்ட பிச்சை
என்றும் அதுவே எம்
வாழ்க்கை
நன்றி மறவோம் இந்த
சிறப்பை
விருது நகர் பிறந்து
பாரத ரத்னா
விருது பெற்ற பாட்டாளி
உழுது பிழைப்போர்
கூட்டாளி
அழுத கண் துடைத்த
நிஜப் போராளி
சட்டமும் விதிகளும்
மனித குலம்
பட்டு வரும் துயர்
விட்டு ஓட செய்யும்
திட்டம் வகுக்க வழி செய்ய வேண்டும்
என்றார்
அதிகாரம், ஊழல்
கை ஊட்டு பாழ்
சதி செய்யும் என்பதால்
கடும்
விதி வகுத்தார் புது வரலாறு தொகுத்தார்
பெருந் தலைவர் என்பது நீர் மட்டுமே
அருந்தவப் புதல்வன்
மறந்து விட்டோம் உன் வழியை பின் ஊர் எங்கும் திறந்து விட்டோம் மதுக் குடியை
ஆண்டுக்கு ஒருமுறை
நினைப்போம்
வேண்டிய படி புகழ்
நீண்ட ஒலை படிப்போம்
மீண்டும் வசதியாய் பழம் பெருமையில் மறப்போம்
மன்னிப்பாயா எம் மன்னவா
- கவிஞர்
புதுவை.கோ.செல்வம்
COMMENTS